Posted on Leave a comment

புதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி ?

1. மாடித்தோட்டம் துவங்க சரியான நேரம்னு பார்த்தால்… நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கினால் தைபட்டத்தில் விதைக்கலாம். مشاهدة قناة beoutq அல்லது மே அல்லது ஜூனில் தொடங்கினால் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம்.

2. முதலில் மாடி தரைக்கு ரெண்டு கோட் வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் அடிக்க வேண்டும். இது லிட்டர் 300 ருபாய். நாலு லிட்டர் பக்கெட் சுமார் 1000 ருபாய் வரும். நாலு லிட்டர் பெயிண்ட் 400 சதுரடிக்கு போதுமானது… ரோலர் வாங்கிக் கொண்டால் நாமே ஈசியாக அடித்து விடலாம்…

3. அடுத்ததாக எத்தனை தொட்டிகள் வைக்கப் போறீங்கன்னு ப்ளான் பண்ணுங்க. குறைந்தபட்சம் 40 தொட்டிகளாவது இருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருக்கும். பட்ஜெட் பிரச்சினை என்றால் 20 தொட்டிகளில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். ضامة இப்ப 40க்கான திட்ட வரைவைப் பார்க்கலாம்.

4. வாங்க வேண்டியவை – குரோ பேக் – 40, செம்மண் – 20 சட்டி, மண்புழு உரம் – 100 கிலோ, கோகோபீட் 5 கிலோ ப்ளாக்ஸ் – 25, வேப்பம்புண்ணாக்கு – 2 கிலோ, (ஆப்ஷனல்: சூடோமோனஸ் – 100 கிராம், அசோஸ்பைரில்லம் – 100 கிராம், ட்ரைகோடெர்மா விரிடி – 100 கிராம்) மொத்த செலவு தோராயமாக 7000 – 8000 ருபாய்கள்

5. குரோபேகுக்கு பதில் பழைய ப்ளாஸ்டிக் கேன்கள் கிடைத்தால் வாங்கலாம். நீண்ட காலம் உழைக்கும்… السلوتس எங்க வீட்டில் இவ்வாறான தொட்டிகள் 200 இருக்கு.

6. நாற்பது குரோபேகுகளை கீழ்கண்ட அளவுகளில் வாங்குவது நல்லது…

ஒரு அடி உயர குரோபேக் – 20
– இது கீரைகள், தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள், மல்லி, புதினா, பச்சை மிளகாய் வளர்ப்புக்கு ஏற்றது..

ஒன்னரை அடி உயர குரோபேக் – 20
– இது வெண்டை, கருவேப்பிலை, அவரை, காராமணி, பாகல், புடலை போன்ற கொடி வகைக் காய்களுக்கு ஏற்றது.

அகலம் எல்லாமே ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி போதுமானது…

7. கோகோபீட்டை தண்ணீரில் ஊற வைத்து ஒரு முறை அலசி எடுத்து மேலே பாயிண்ட் 4ல் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மேலே ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு பைகளில் (குரோபேக்) நிரப்ப வேண்டும்.

8. குரோபேக்களை கீழே வைத்தால் தரை ஈரம் காயாமல் பிரச்சினை வரும் என்பதால் செங்கல் வைத்து அதன் மேல் தூக்கி வைக்க வேண்டும். அல்லது 18 குரோபேக் வைக்கும் மூன்று அடுக்கு இரும்பு ஸ்டேண்ட் 1700 ருபாய் செலவில் நாமே அரை மணி நேரத்தில் செய்து விடலாம். எப்படி என்று ASK Jhansi யூட்யூப் சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

9. மண் கலவை நிரப்பப்பட்ட குரோபேகுகளில் தினமும் சிறிது தண்ணீர் விட்டு மூன்று வாரங்கள் வைக்க வேண்டும். அதற்குள் நுண்ணுயிர்கள் நன்கு பெருகி மண்ணை வளப்படுத்தி விடும். அதன் பின்னரே விதை போட வேண்டும்.

10. அடுத்ததாக தரமான விதைகளாகப் பார்த்து வாங்க வேண்டும். முதலில் ஆரம்பிக்கும் போது நாட்டு விதையோ ஹைப்ரிட் விதையோ கிடைப்பதைக் கொண்டு துவங்கி விட்டு பின்னர் அடுத்த சீசனில் நாட்டு விதைக்கு மாறிக் கொள்ளலாம்.

11. மூன்று வாரங்கள் ஆவதற்குள் விதைகளை டிஸ்போசபிள் டம்ளர்கள் அல்லது சீட்லிங் ட்ரேவில் மண் கலவை நிரப்பி அதில் போட்டு நாற்று உருவானதும் எடுத்து நடலாம்.

12. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கை மண்புழு உரம் அல்லது மக்கிய சாணம், வாரம் ஒரு முறை மீன் அமிலம் அல்லது பஞ்ச கவ்யா தெளித்தால் போதுமானது.

13. ஜூலை முதல் மார்ச் வரை பிரச்சினை இல்லை. அப்படியே வளரும். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் வெய்யில் கொளுத்தும் போது ஷேட் நெட் போட்டுக் கொண்டால் நல்லது. அல்லது வாடகை வீடு என்றால் ஜூன் ஜூலையில் விதை போட்டு மார்ச்க்குள் அறுவடை எடுத்து விட்டு ஒரு ஓரமாக தூக்கி வைத்து விட்டால் மீண்டும் அடுத்த ஜூன் ஜூலை மாதம் விதை போட்டுக் கொள்ளலாம். எல்லா காய்கறி செடிகளுக்குமே அதிகப்பட்சம் ஆறு மாதங்கள் தான் ஆயுள். அதனால இவ்வாறு செய்து ஷேட் நெட் இல்லாமலே சமாளிப்பது சுலபமே…

இதை எல்லாம் Step By Step செய்முறை வீடியோக்களாக ASK Jhansi யூட்யூப் சேனலில் “வீட்டு விவசாய பண்ணை” என்ற ப்ளே லிஸ்ட் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்…

Leave a Reply