எப்படி ஆஸ்க் ஜான்சி டீலர் ஆவது?

ஆஸ்க் ஜான்சி நிறுவனத்தின் டீலராக ஆக தங்களை அன்புடன் வரவேற்கிறோம். டீலர் ஆவது எளிமையானது. கீழே இருக்கும் நிபந்தனைகளை வாசித்து விட்டு அதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் டீலர்ஷிப் ஃபார்மை பூர்த்தி செய்யவும்.

To Read This Page in English Click Here >>>

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் பொருட்கள் தயாரிக்கும் குயின்ஸ்லேண்டு இண்டர்நேஷனல் நிறுவனம் ஈரோட்டில் அமைந்துள்ளது. 2018ம் வருடம் துவங்கப்பட்ட நமது நிறுவனம் 30 ஊழியர்களுடன் தமிழகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட டீலர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சிறந்த தொழில் முனைவோருக்கான 2019 SYPA Award பெற்றுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் சொந்த யூட்யூப் சேனலில் மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்ஸ் இருப்பதால் நம் பொருட்களை அதன் மூலம் மார்க்கெட்டிங் செய்து வருகிறோம். டிவி விளம்பர உலகிலும் நுழைந்து விட்டதோடு பேனர், பேம்ப்லெட் மற்றும் ரெஃபரல் மார்க்கெட்டிங் மூலமும் எங்கள் மார்க்கெட்டிங் வியூகத்தை அமைத்துள்ளோம்.

எங்களிடம் என்னென்ன பொருட்கள் என்னென்ன அளவுகளில் இருக்கின்றன என்று நம் ஆன்லைன் ஸ்டோர் பகுதியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பின்கோடுவாரியாக டீலர்களை மற்றும் மினி டீலர்களை நியமித்து வருகிறோம். 

நம் இணையதளத்தில் டீலருக்கென தனி லாகின் உள்ளது. இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் போடும் போது உங்கள் பின்கோடுக்கான ஆர்டர்களை பிக் செய்து டெலிவரி செய்ய வேண்டும். வாட்ஸ் ஆப் மூலமும் தங்களுக்கு ஆர்டர்கள் வரலாம். அத்துடன் தமக்கு ஒதுக்கப்பட்ட பின்கோடுக்கான கடைகளுக்கும் டீலர்கள் சப்ளை செய்ய வேண்டும்.

டீலர்ஷிப்புக்கான நிபந்தனைகள்

 1. பின்கோடுவாரியாக 10-15 கிமீ சுற்றளவில் டீலர்ஷிப் ஒதுக்கப்படுகிறது. டீலருக்கு அப்ளை செய்பவர்களுக்கு அந்த ஏரியாவில் நிரந்தர முகவரி இருக்க வேண்டும். ட்ரான்ஸ்பர் ஆக வாய்ப்பு இருப்பவர்கள் அப்ளை செய்ய வேண்டாம்.
 2. டீலர்களுக்கு பேக் எண்ட் இன்செண்டிவ் உடன் சேர்த்து 25 சதவீதம் மார்ஜின் கிடைக்கும். பேக்கெண்ட் இன்செண்டிவ் அவர்கள் பர்ச்சேஸ் வால்யூம் பொறுத்து மாறுபடும். எனினும் கடைகளுக்கும் ரீடெய்லர்களுக்கும் சப்ளை செய்யும் பொருட்டு பொருட்களின் MRP யை கூட்டி வைத்திருக்கிறோம்.
 3. ஒவ்வொரு டீலருக்கும் ஒரு கோடு நம்பர் தருவோம். அத்துடன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள டீலர்களுக்கென தனி அலைபேசி எண் உள்ளது.
 4. டீலர்களுக்கென தனி லாகின் உள்ளது. அதில் லாகின் செய்து தான் தங்களின் அனைத்து ஆர்டர்களையும் போட வேண்டும்.
 5. பொருட்களை சப்ளை செய்ய தங்களிடம் டூவீலர் இருக்க வேண்டும். அத்துடன் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் ஆப் தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். எல்லா அப்டேட்ஸும் டெலிகிராமில் வரும். ஆர்டர் சம்பந்தமான விவரங்களை வாட்ஸ் ஆப்பில் மற்றும் மொபைல் எண்ணில் கேட்க வேண்டும்.
 6. டீலராக ஆக வேண்டுமெனில் முதலில் ஃபார்ம் ஃபில் செய்து அனுப்ப வேண்டும். தங்கள் அப்ளிகேஷன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் ருபாய் 35,000 செலுத்த வேண்டி இருக்கும். இதில் 5,000 ருபாய்கள் டெபாசிட் ஆக கணக்கில் வரவு வைக்கப்படும். அத்துடன் சுமார் 23,000 ருபாய் மதிப்பிலான பொருட்கள் ஒரு கிட் ஆக அனுப்பி வைப்போம். மீதி தொகை உங்கள் கணக்கில் Funds ஆக சேர்த்து விடுவோம். அடுத்த ஆர்டர் செய்யும் போது அந்த ஃபண்ட்ஸை உபயோகித்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஃபண்ட்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று உங்கள் டீலர் லாகினில் காண்பிக்கும்.
 7. டீலர்ஷிப்பில் இருந்து வெளியேறும் போது டெபாசிட் தொகை ருபாய் 5,000க்கு பொருட்கள் வாங்கிக் கழித்துக் கொள்ள வேண்டும். எந்த வித காரணத்துக்காகவும் டெபாசிட் மற்றும் ஃபண்ட்ஸ் பணமாகத் திருப்பித் தரப்பட மாட்டாது. 
 8. பொருட்களை ரெகுலர் லாரி சர்வீஸில் மட்டுமே அனுப்பி வைப்போம். தங்கள் ஊரில் இருந்து அதை டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும். பொருட்களுக்கான விலையில் ட்ரான்ஸ்போர்ட் அலவன்ஸ் ஒதுக்கி உள்ளோம். அதை பில் தொகையில் கழித்து விடுவோம். பின் தங்கள் இடத்தில் அந்த தொகையை செலுத்தி பொருட்களைப் பெற வேண்டும்.
 9. ஆரம்பகட்டத்தில் தங்களுக்கு GST தேவையில்லை. எனினும் விற்றுமுதல் அதிகரிக்கும் போது தேவைப்பட்டால் GST எடுக்க வேண்டி இருக்கும்.
 10. பொருட்களுக்கான எக்ஸ்பைரி தேதி 2 வருடங்கள். விற்ற சரக்கை எவ்வித காரணத்துக்காகவும் வாபஸ் பெற இயலாது.

டீலர்களுக்கான விதிமுறைகள்

 1. டீலர்கள் கெமிக்கல்களை வாங்கி விற்கவோ அல்லது லாண்டரி கேர் மற்றும் பர்சனல் கேர் வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு, ஷாம்பு சார்ந்த ஹோம்கேர் பொருட்களை தயாரிக்கவோ அல்லது வேறு நிறுவனத்தின் இந்த ஹோம்கேர் பொருட்களுக்கு டீலராகவோ இருக்கக் கூடாது.
 2. டீலர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக 5,000 ருபாய்க்காவது கொள்முதல் செய்ய வேண்டும். அதிகமாக கொள்முதல் செய்தால் அதிகமாக பேக்கெண்ட் இன்செண்டிவ் கிடைக்கும். தொடர்ந்து 2 மாதங்கள் கொள்முதல் செய்யாத பட்சத்தில் காரணத்தை நம் நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தங்கள் டீலர்ஷிப் கேன்சல் ஆகிவிடும்.
 3. டீலர் ஆன பின் விலைப்பட்டியல் தருவோம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலைக்கே டீலர்கள் கடைகளுக்கும் ரீடெய்லருக்கும் மினி டீலருக்கும் சப்ளை செய்ய வேண்டும். 
 4. தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பின்கோடுகளில் ஆன்லைன் ஆர்டர் வரும் பட்சத்தில் அதிகப்பட்சமாக 5 நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்து விட வேண்டும். ஆன்லைன் ஆர்டரில் காண்பிக்கும் இன்வாய்ஸ்க்கான தொகையை விட அதிகமாகக் கஸ்டமரிடம் இருந்து பெறக் கூடாது.
 5. தினமும் டெலிகிராம் மெசேஜ் செக் செய்து தேவைப்பட்டால் பதில் அளிக்க வேண்டும். நிறுவனத்தின் நடப்புகள் மற்றும் கொள்கைகளை டெலிகிராம் ஆப் மூலம் தெரிவிப்போம். டெலிகிராம் இல்லாதவர்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
 6. எல்லா பொருட்களும் எப்போதும் டீலர்களிடம் ஸ்டாக் இருக்க வேண்டும். பொருட்கள் தீர்வதற்கு முன்பே ஆர்டர் செய்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
 7. நிறுவனம் பற்றிய பொய்யான அவதூறுகளை வெளியில் பரப்பவோ சக டீலர்களிடம் பகிரவோ கூடாது. அனைவரின் நலனுக்காகவும் எடுக்கப்படும் எதிர்கால கொள்கை மாற்றங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
 8. மாதாமாதம் குறைந்தபட்சமாக 5000 ருபாய்க்கு ஆர்டர் போடாத பட்சத்தில் இன்னொரு டீலரை கூடுதலாக நியமித்து விடுவோம் அல்லது நமது நிறுவனம் அவ்விடத்தில் தனிப்பட்ட முறையில் நேரடியாக மார்க்கெட்டிங்கில் இறங்கும்.

எப்படி டீலரில் இருந்து வெளியேறுவது ?

 1. டீலரில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் 60 நாட்களுக்கும் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் புதிய டீலர் போட வசதியாக இருக்கும்.
 2. வெளியேறும் போது டெபாசிட் பணத்தின் மதிப்புக்கு பொருட்கள் வாங்கிக் கழித்துக் கொள்ள வேண்டும். டீலர் ஆகி ஒரு வருடம் கழித்து வெளியேறுபவர்கள் மட்டும் டெபாசிட் தொகையை விட ருபாய் 500 கூடுதல் மதிப்புக்கு பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
 3. டீலரில் இருந்து வெளியேறும் போது நிறுவன ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாக்க வேண்டும். நிறுவனத்தின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்கும் எச்செயலையும் செய்யக் கூடாது.
 4. மேலே சொல்லப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பட்சத்தில் தங்கள் டெபாசிட் தொகையை இழக்க நேரிடும்.

Dealership Application Form >>>

 
 

எப்படி ஆஸ்க் ஜான்சி ரீசெல்லர் ஆவது ?

ஆஸ்க் ஜான்சி ரீசெல்லர் ஆக இந்த பக்கத்தைப் பார்க்கவும்… >>>